மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் மார்ச்.10-ல்  நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடனக் கலைஞர்கள் தங்களது நாட்டியத்தை ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவான 32-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மார்ச் 10-ம் தேதி மாலை

News image
Updated On :5 மார்ச் 2013, 1:21 pm

G.Sundararaj

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடனக் கலைஞர்கள் தங்களது நாட்டியத்தை ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவான 32-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மார்ச் 10-ம் தேதி மாலை மகா சிவராத்திரியன்று தொடங்குகிறது.  நாட்டியாஞ்சலி விழா தொடர்ந்து மார்ச்.14-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

மார்ச் 10-ம் தேதி மகாசிவராத்திரயன்று மாலை நாட்டியாஞ்சலி தொடக்கவிழா நடைபெறுகிறது. யு.ஆர்.உமாநாத தீட்சிதர் தலைமை வகிக்கிறார். கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஏ.ஆனந்ததாண்டவ தீட்சிதர் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு அரசு கலை மற்றும் கலாசார துறை ஆணையர் எஸ்.எஸ்.ஜவகர் நாட்டியாஞ்சலியை தொடங்கி வைத்துப் பேசுகிறார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தலைவர் பி.சுரேந்திர்மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறார். பிரேவியா கேப்பிட்டல் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் தலைவர் பாரத்பிஷ், யு.எஸ்.ஏ நியுயார்க் தமிழ்ச் சங்கம் தலைவர் பிரகாஷ் எம்.சுவாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றுகின்றனர். நாட்டியாஞ்சலி விழாவில் மலேசியா, ஸ்ரீலங்கா, ஈரான், மஸ்கட், ஆகிய நாடுகளைச் சேர்ந்த நடன கலைஞர்களும், புதுதில்லி, மும்பை, கொச்சின், பெங்களூர், மேங்களூர், ஹைதராபாத், சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலிருந்து நடன கலைஞர்களும் பங்கேற்று நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனர்.

விழா ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன், துணைத் தலைவர்கள் கே.சுவாமிநாதன், வி.எஸ்.ராமலிங்கம், செயலாளர்கள் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம், ஆர்.நாகசாமி, இணைச் செயலாளர் ஆர்.நடராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.ராமநாதன், உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துகுமரன், வி.பாலதண்டாயுதம், ஆர்.சபாநாயகம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.